Siddha Marundhu

நீண்ட ஆயுள்...!

உங்களுக்கு 35 முதல் 45 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. 

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே  சிக்கனமாக
இருக்காதீர்கள். 

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்! 

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். 

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! 

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். 

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! 

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
  
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!! 

அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

உங்கள் மனைவி, மக்கள்,
நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும்.  அவர்கள்தான்  உங்களை இளைமையாகவும்,
அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
குப்பைமேனி..!



கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி.. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்

பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.