Siddha Marundhu

முடி கொட்டாமல் இருக்க


முடி கொட்டாமல் இருக்க:




வெங்காயம்

தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

வெந்தயம் 

சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு :

நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.



5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.




No comments:

Post a Comment