Siddha Marundhu

நீரிழிவு

நீரிழிவு நோய் காரணங்கள் :



நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.
இன்சுலின் சுரப்பைத் தடுப்பதற்கெனப் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன; பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதைத் தூண்டுகின்றன. இவற்றை ‘சர்க்கரை நோயின் முன்காரணிகள்’ ( Diabetes Risk Factors ) என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.

பரம்பரைத் தன்மை
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் (Genes) உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.
உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்று இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்தச் செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளும். அதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவது இல்லை.
புத்தகங்களை அச்சிடும்போது பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.
நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்தப் பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.

உடல் பருமன்
சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.
இன்னொரு வழி இது: உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.

இன்சுலின் எதிர்ப்பு உணர்வு
உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள், இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை; இன்சுலினை எதிர்க்கின்றன. இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.
சில வேளைகளில், கையில் சாவி இருந்தாலும், அது பூட்டைத் திறக்கச் சண்டித்தனம் செய்யும் அல்லவா? அதுபோல, சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரந்தாலும், அது சரிவர வேலை செய்யாது. காரணம், இவர்களுடைய செல்களில் ‘இன்சுலின் ஏற்பான்கள்' (Insulin Receptors) குறைவாக இருக்கும். இதனால், செல்களுக்குள் குளுகோஸ் நுழைய முடியாமல் ரத்தத்தில் தங்கிவிடும். இதன் விளைவாக, ரத்தச் சர்க்கரை அதிகமாகி, இவர்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடும். இதைத்தான் ‘இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' (Insulin Resistance) என்கிறோம்.
அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.

மன அழுத்தம்
நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.
இதனால் நீரிழிவு நோய் வருகிறது. மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு நோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தால் அது அதிகப்படலாம்.

அடிக்கடி கர்ப்பம் அடைதல்
கர்ப்பமான பெண்களுக்கு, கர்ப்பப்பையில் குழந்தை வளர்ந்து வரும்போது சில ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் வருகிறது. இந்த ஹார்மோன் பிரச்சினை பிரசவத்துக்குப் பிறகு பல பேருக்குச் சரியாகிவிடுகிறது. இதனால், குழந்தை பிறந்த பின்னர், இவர்களுக்கு நீரிழிவு நோய் மறைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.
அதிலும் அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினையும் அடிக்கடி வருவதால், நீரிழிவு நோய் நிலைத்துவிடுகிறது. குறிப்பாகச் சொன்னால், கர்ப்பத்தின்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தையைப் பெற்ற பெண்கள், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

உயர் ரத்த அழுத்தம்
சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்த மும் மிக நெருங்கிய ‘நண்பர்கள்’. சர்க்கரை நோயை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, ரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ரத்த மிகைக் கொழுப்பு
உடல் பருமன் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ஒருவருக்குத் திசுக் கொழுப்பும் ரத்தக் கொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் கொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு நோய் வரும்.

சினைப்பை நீர்க்கட்டிகள்
பெண்களுக்குச் சினைப்பையில் உருவாகின்ற ஒரு வகை நார்க்கட்டிக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி' (Poly Cystic Ovary Syndrome - PCOS) என்று பெயர். இந்த நோய் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) எனும் ஹார்மோன் அதிகமாவதால் வருகிறது. உடல் பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களுக்கு முகத்தில் பருக்களும், முடியும் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு சரியாக நிகழாது. கழுத்தின் பின்புறத் தோல் கறுப்பாக, தடிப்பாக, வரிவரியாக இருக்கும் (Acanthosis nigricans). இந்த நோய் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது.

சோம்பலான வாழ்க்கை முறை
உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. இந்த மாதிரி அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படித் தொடர்ந்து சுரக்கும்போது, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.

சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா?
மேற்சொன்ன வழிகளில் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதைத் தள்ளிப்போடலாம்.
# மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.
# எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
# நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
# தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

சர்க்கரை நோய் உணவு முறைகள்


சர்க்கரை நோய் உணவு முறைகள்:



1. இனிப்பு சுவையுடைய உணவு பொருட்களை அறவே தவிர்த்தல்

2. தேன், கருப்புக்கட்டி போன்ற இயற்கை இனிப்பு உணவுகளையும் தவிர்த்தல்

3. அதிக மசாலா சேரும் உணவுபொருட்களை தவிர்த்தல் அல்லது அளவு குறைவாக உண்ணுதல்
4. எண்ணெய் சேரும் உணவுகளை குறைத்து உண்ணுதல்

5. நெய், வெண்ணெய், டால்டா சேரும் பதார்த்தங்களை தவிர்த்தல்

6. குளிர்பானங்களை தவிர்த்தல். பெப்ஸி, கோகோ கோலா, மிராண்டா, 7அப் போன்ற அனைத்துவகை குளிர்பானங்களையும் தவிர்த்தல்.

7. காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை நீக்கி அருந்தவும்.

8. பால் பொருட்களை முறையாக பயன்படுத்தவும்.

9. கிழங்குகளை உணவில் தவிர்க்கவும். உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,சேம்பு கிழங்கு, கருணை கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவும்.

10. காரட், பீட்ரூட் போன்றவற்றை தவிர்க்கவும்.

11. பழங்களை அதிகம் தவிர்க்கவும். மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை பழம், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் இவற்றை தவிர்க்கவும்.

12. கொய்யா, ஆப்பிள், பப்பாளி இவைகளை முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

13. ஐஸ் கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், பால் ஸ்வீட்ஸ் போன்றவைகளை அறவே தவிர்க்கவும்.

14. எண்ணெய் அதிகம் சேரும் கொழுப்பு பொருட்களை குறைவாக உணவில் சேர்க்கவும்.

15. அன்றாட உணவில் கீரை அதிகம் சேர்க்கவும். குறிப்பாக சிறு கீரை, அரைக்கீரை, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை இவைகளை அதிகம் சேர்க்கவும்.

16. கேழ்வரகு, சோளம், சாமை அரிசி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

17. புரத சத்துப் பொருட்களான கொண்டைக் கடலை, சிறு பயறு,மொச்சை, தட்டாம் பயறு, கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்க்கவும். 18.கத்தரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், தடியங்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

19. கோதுமை சேரும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் எளிதில் பசிக்காது.

20. உணவின் அளவை குறைத்து உணவு உண்ணும் வேளையை அதிகமாக மாற்றிக் கொள்ளவும். தினமும் மூன்று வேளை உண்ணுவதை நான்கு வேளையாக மாற்றி உணவு அளவை குறைத்துக் கொள்ளவும்.


சர்க்கரை நோய்:

சர்க்கரை நோய் குறைய..!


சீந்தில் கொடிச்சாறை வெந்நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நீரழிவு நோய் குறையும்..

பாகற்காய் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு குறையும்.

முட்டைக்கோஸ் அதிக அளவில்சாப்பிடவும்.

பப்பாளி, நாவற்பழம் இரண்டையும் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்

வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்னீரில் ஊறவைத்து காலையில்  நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை  குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

மாதுளம் பழத்தோலை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை , மருதம்பட்டை மூன்றையும் காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க நீரிழிவு நோய் குணமாகும்..

ஆவாரம் பூக்களை  சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குறையும்.

வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் அரை கரண்டி அளவு வாயில் போட்டு தண்ணீர் அருந்த சர்க்கரை நோயை குறைக்கலாம்.

தினமும் ஒரு கோவைப் பழம் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் பொடி செய்து பாலில் கலந்து குடிக்க  சர்க்கரை நோய் குறையும்

சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து சலித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்..

நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்..

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

நீரில் துளசி இலை, வில்வ இலை மற்றும் வேப்பிலைகளை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி காலையில் குடித்து வந்தால் நீரிழிவு குறையும்..

மஞ்சள், நெல்லி பொடி இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

நீரிழிவு நோய் குணமாக

நீரிழிவு நோய் குணமாக பாதாம் சாப்பிடுங்க..!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.

பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

உடல்பருமன்

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.

நீரிழிவு தகுந்த & தவிர்க்க வேண்டிய உணவு :

நீரிழிவு நோயாளிகளின் தகுந்த உணவு..
நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியுமே தவிர முழுவதுமாகக் குணப்படுத்த இயலாது. இதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் சிறுநீரகம், கண், இரத்தக் குழாய் போன்ற உறுப்புகளின் பாதிப்பைத் தவிர்க்க முடியும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் ஆகியவை உதவுகின்றன. உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு சிகிச்சை முறையில் முதலிடம் வகிக்கின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் மட்டுமே உண்ண வேண்டும் என்று தேவையில்லை எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதை விட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதே முக்கியமாகும். குறிப்பிட்ட உணவு வகைகள் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.உணவு உண்ணாமலிருப்பது, அளவிற்கு மேல் உண்பது இரண்டுமே கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:-
இனிப்புகள், தேன், வெல்லம், சர்க்கரை கலந்த பலகாரங்கள். கேக், பிஸ்கெட், ஐஸ்கிரீம். வெண்ணெய், நெய், பொரித்த உணவு வகைகள். மதுபானங்கள், குளிர் பா னங்கள், ஹார்லிக்ஸ், போர்ன் விட்டா. உலர்ந்த பழவகைகள், கொட்டைப் பருப்பு (முந்திரி, பாதாம், பிஸ்தா). எண்ணெயில் தயாரித்த ஊறுகாய், வாழைப்பழம், அசைவ உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதை தினமும் சாப்பிட்டால் எடை குறையாது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறையாது. எனவே தான்வாரம் ஒரு முறைக்கு மேல் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தாராளமாக சாப்பிடக்கூடியவை:-
கீரை வகைகள், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், குடைமிளகாய், பப்பாளிப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு, தக்காளி, செளசௌ, அவரைக்காய், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா, காய்கறி சூப், எலுமிச்சை.
சாப்பிடக்கூடிய பழவகைகளின் அளவு:-
சாத்துக்குடி – 1,
ஆரஞ்சு – 1,
கொய்யா – 1,
ஆப்பிள் – அரை,
திராட்சை – 15,
பிளம்ஸ்- அரை,
தர்ப்பூசணி – 1
பெரிய துண்டு, மாதுளை- அரை,
பலா- 3 சுளைகள்,
அன்னாசி- 2 சிறிய துண்டுகள்,
பப்பாளி- 1 பெரிய துண்டு.
சாப்பிடும் நேரம்:-
காலை 6 மணி:- காபி அல்லது தேநீர் 1 கப், சர்க்கரை இல்லாமல்.
காலை 8 மணி:- இட்லி- 4, அல்லது தோசை- 4 அல்லது சப்பாத்தி- 4 அல்லது இடியாப்பம் – 4, உடன் சட்னி அரை கப் அல்லது ரொட்டி 4 துண்டுகள்.
முற்பகல் 11 மணி:- மோர் அல்லது தக்காளி அல்லது பருப்பு அல்லது காய்கறி சூப் அல்லது 1 டம்ளர் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிக்காய் – 1 கப்.
பகல் 1 மணி:- சோறு-2 கப், சாம்பார் 1/4 கப், கீரை-1 கப், காய்கறி-1/2 கப், ரசம்-1 கப், கோழி-75 கிராம் அல்லது கறி- 50 கிராம் அல்லது மீன்-75 கிராம் அல் லது முட்டை வெள்ளைக் கரு அல்லது சுண்டல் 1/4 கப்.
மாலை 5 மணி:- காபி அல்லது தேநீர்-1 கப் (சர்க்கரை இல்லாதது), வடை- 1 அல்லது  பிஸ்கட்- 2.
இரவு 8 மணி:- காலை அல்லது பகல் சாப்பாட்டைப் போல் பாதி அளவு.
இரவு 10 மணி:- பால் அரைகப், பழம் சிறியது-1