அல்சர்..!
அல்சர்..!

உண்ணும் உணவானது செரியாமல், உணவு உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் தாங்க முடியாத வயிற்று வலியையும், எரிச்சலையும் உண்டாக்கி உணவை வாந்தி வரச் செய்யும். உடலில் சத்து குறைந்து மெலிவடையும்.
மிகவும் காரமான சூடுள்ள உணவுகளை உண்ணுதல் மண், கல், தூசி இவைகள் கலந்த பொருட்களை உண்பதாலும், சுண்ணாம்பு கலந்த நீரை குடிப்பதாலும் செரிக்காத உணவுகளை உண்ணுதல், அடிக்கடி கோபப்படுதல், பட்டினி இருத்தல் போன்றவற்றால் இந்நோய் வருகிறது.
பசியின்மை, பசி இருப்பினும் உணவின் மேல் விருப்பமின்மை, அடிக்கடி ஏப்பம் உண்டாகுதல், வயிற்றை புரட்டி வலித்தல், வாந்தி வருதல், புளித்த ஏப்பம், வயிறு இரைச்சல், வாய் குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற முன் அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
யூகி முனிவர் என்ற சித்தர் வகுத்தபடி அல்சர் என்ற குடல்புண் 8 வகைப்படும்.
1. வாத அல்சர்
2. பித்த குடல் புண்
3. வாயு கலந்த குடல் புண்
4. வலி குடல் புண்
5. எரிச்சல் கலந்த குடல் புண்
6. வாந்தி கலந்த குடல் புண்
7. வாத, பித்த, கபம் கலந்த குடல் புண்.
8. கபம் கலந்த குடல் புண்.
குடல் புண்ணை சித்த மருத்துவத்தில் குன்மம் என்று சொல்வார்கள்.
அல்சரின் பொது குறி குணங்கள்
இந்நோய் பெரும்பாலும் இருபத்தைந்து வயது முதல் நாற்பத்தைந்து வயதுடைய ஆண்களுக்கு வருவதாகும். குறைந்தளவே பெண்களுக்கு வரும். வயது முதிர்ந்த பிறகும் இந்நோய் வருவதுண்டு.
மருத்துவம்
எளிதில் செரிக்கக்கூடிய காய்களான கத்தரி, முருங்கை, வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றின் இளம் பிஞ்சுகளை உண்ணலாம்.
எளிதில் செரிக்காத தேங்காய், உளுந்து, ஆட்டுக்கறி, மீன் ஆகியவை ஆகாது.
தினமும் வேளைக்கு உணவு உண்ண வேண்டும். கார மற்றும் அதிக சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சீரக மாத்திரை காலை - 1, இரவு - 1 தேனில் குழைத்து உணவுக்குப் பின்பு கொடுக்கலாம்.
ReplyDeleteஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...
எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/
தொடர்புக்கு:
ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
+91.8608400035, +91.8608400041
Aadhavan Siddha Groups +91.8754473544