Siddha Marundhu

கற்பூரவல்லி

கற்பூரவல்லி....!



இருமல், சளி, ஜலதோஷமா..?


கற்பூரவல்லி ,இது ஓர் அற்புதமான மூலிகை செடி. இதன் தாயகம் இந்தியாதான். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. இதன் வேறு பெயர்கள் - ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டது.

எப்படி சாப்பிடலாம்?

கற்பூரவல்லி இலைகளை தேங்காய், பருப்பு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக செய்து சாப்பிடலாம்.

இதன் இலைகளை நன்கு கழுவி, கடலை மாவு சேர்த்து, பஜ்ஜி, பகோடா செய்து சாப்பிடலாம்.

என்ன பல‌ன்கள்?

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

உடலின் சளி நீங்க இலைகளை அரைத்து நீர்கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும்.

No comments:

Post a Comment